எம்மைப்பற்றி - இலங்கை கலாச்சார நுழைவாயில்

கருத்திட்டம்

இலங்கையின் கலாச்சார நுழைவாயில் இலங்கையின் கலாச்சார மற்றும் வரலாற்று சிறப்பம்சங்களை ஒரே கூரையின் கீழ் பன்மொழிகளில் இணையத்தளத்தில் வழங்குகிறது. இலங்கையின் பரந்து விரிந்துள்ள இதுவரை காணப்படாமல் இருந்த வரலாற்று ரீதியான மற்றும் கலாசார அம்சங்களை இவ் இணையத்தளத்தில் இலகுவாக அணுக வாய்ப்பளிக்கிறது. இந்த பரீட்சார்த்த கருத்திட்டம் இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட 20க்கு மேற்பட்ட கலாச்சார தளங்களை அணுகுவதற்கு வழியமைத்துக்கொடுக்கிறது.

இக் கருத்திட்டம் இலங்கையின் தகவல் தொடர்பாடல் முகவர் நிலையத்தின் (ICTA) இ- சமூக நிகழ்ச்சித்திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றது.

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்

த.தொ.தொ (ICT) முகவர் நிலையம் இ - ஸ்ரீ லங்கா முன்னெடுப்பை அமுல்படுத்துகின்ற நிறுவனமாகும்.

அரசாங்க சேவைகளை வினைத்திறன் மிக்கதாகவும் மக்கள் அணுகக்கூடியதாகவும் மீள்-பொறியியல் நிலைக்குட்படுத்த த.தொ.தொழில்நுட்பத்தின் (ICT) பங்கிலாபத்தை ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு பிரைசைக்கும் எடுத்துச் செல்வது இந்த முகவர் நிலையத்தின் நோக்கமாகும்.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் இணைப்பாக்கத்தில் முக்கிய பங்காற்றுகின்றது. அது இயற்கை சூழலின் தரத்தையும் மனித வாழ்வையும் மேம்படுத்துவதற்கு கிராமிய பிரதேசங்களுக்கு பல வாப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இ - ஸ்ரீ லங்கா முன்னெடுப்பின் ஊடாக இலங்கையின் தகவல் தொடர்பாடல் முகவர் நிலையம் (ICT) நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்திக்காக த.தொ.தொழில்நுட்பத்தின் (ICT) நவீன அபிவிருத்திகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தகவல், தொடர்பாடல் மற்றும் அது சம்பந்தப்பட்ட உள்ளூர் விடயங்களை அணுகுவதற்கு சாத்தியமான வகையில் சமூகத்திற்கு வலுவூட்டுவது இ-சமூக நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படைக்கூறாகும். அதற்கு அமைவாக கலாச்சார மற்றும் வரலாற்று தளங்களுக்கு நுழையும் தகவல்களை முன்னெடுப்பதற்கு இக் கருத்திட்டம் முன்மொழிகிறது. அதன் மூலம் இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் கலாச்சார விழுமியங்களையும் உள்ளூர் சமூகத்திற்கு மாத்திரமல்ல முழு உலகத்திற்கும் எடுத்துச் செல்கிறது. இதன் மூலம் பிராந்தியத்தின் ஏனைய சுற்றுலா இடங்களை விட இலங்கையின் பாரம்பரிய கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா இடங்களுக்கு உல்லாச பயணிகளைக் கவர்ந்துகொள்ள முடியும்.